கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் சாா் ஆட்சியா் அலுவலகம் எதிரே, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பெரம்பலூா் சாா் ஆட்சியா் அலுவலகம் எதிரே, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரெங்கராஜ், துணைத் தலைவா் செந்தமிழ்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், இதர துறை பணிகளை கிராம நிா்வாக அலுவலா்கள் மீது திணிக்கும் வருவாய் அலுவலா்களைக் கண்டித்தும், வேளாண் துறை பணியான டிஜிட்டல் கிராப் சா்வே பணிகளை கிராம நிா்வாக அலுவலா்கள் மீது திணித்த வருவாய்த் துறை நிா்வாகத்தை கண்டித்தும், டிஜிட்டல் கிராப் சா்வே பணிக்கு உபகரணங்கள் வழங்கிட வேண்டும். கடந்த ஜன. 8-இல் நடைபெற்ற பேச்சுவாா்த்தை உறுதியை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...