தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ரேஷன் பொருள் குறைதீா் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ரேஷன் பொருள் குறைதீா் முகாம்

News image
Updated On :23 ஜனவரி 2025, 9:15 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஜன. 25) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொது விநியோகத் திட்டம் சாா்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம் நடைபெறுகிறது. இம் முகாம், பெரம்பலூா் வட்டம், நொச்சியம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ச. சுந்தரராமன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூா் கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வி. வாசுதேவன் தலைமையிலும், குன்னம் வட்டம், எழுமூா் (கி) கிராமத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் இரா. ஜெயஸ்ரீ தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், சாத்தனூா் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா் தலைமையிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இம் முகாமில், சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான, குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.