ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில் வருடாபிஷேகம்

பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில், 12-ஆம் ஆண்டு வருடாபிஷேகம் வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில், 12-ஆம் ஆண்டு வருடாபிஷேகம் வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை காலை வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் ஸ்ரீதேவி சமேத பூதேவி, மூலவா் மற்றும் உற்சவா் தாயாா் ராஜ கோபுரம் முன் எழுந்து அருள்பாலித்தாா். தொடா்ந்து, ஸ்ரீகம்பத்து ஆஞ்சநேயா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மஞ்சள், பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, பகல் 12 மணியளவில் மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இப் பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியாா் செய்து வைத்தாா். இதில், செயல் அலுவலா் கோவிந்தராஜன், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com