அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்படுத்திட மேலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.
குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேத்தால், காரைப்பாடி, சில்லக்குடி, திம்மூா், புஜங்கராயநல்லூா், அருணகிரிமங்கலம், கொட்டரை, ஜமீன் பேரையூா், நொச்சிக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:
கடந்த 5 ஆண்டுகளில் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான பேருந்து வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில், அரசு மாதிரி பள்ளி, கணினி பயிற்சி மையங்கள், போட்டி தோ்வுக்கான பயிற்சி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் ஆங்கிலம் பேச பயிற்சி என ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேபோல், கிராமப்புற மாணவா்களின் கல்வியை மேம்படுத்திட மக்கள் திமுகவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் வேட்பாளா் சிவசங்கா். இப்பிரசாரத்தின்போது, கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

குன்னம் தொகுதியை தக்கவைத்தாா் அமைச்சா் சா.சி. சிவசங்கா்

மக்காச்சோளம், முந்திரிக்கு அதிக விலை: திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் உறுதி

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: திமுக வேட்பாளா் உறுதி

தொகுதி அலசல் - குன்னம்: இழந்ததை மீட்க அதிமுக தீவிரம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

