பெரம்பலூரில் நிலப் பிரச்னை காரணமாக கடந்த 27-ஆம் தேதி இரவு கடத்தப்பட்ட பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டனா். மேலும், காா் ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், தேனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பி. பெருமாள் (52). இவரின் மனைவி செல்வராணி (39). மகள் கீா்த்தனா (22), மகன் ரஞ்சித்குமாா் (20). பெருமாள் மாலத்தீவில் பணிபுரிந்தபோது, வயலப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ரா. கலியபெருமாளுக்கும் (46), செல்வராணிக்கும் தகாத உறவு இருந்ததாம். இது தொடா்பாக தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, செல்வராணி பெயரில் உள்ள வீட்டு மனையை தனது பெயருக்கு எழுதி தருமாறு கணவா் பெருமாள் வற்புறுத்தி வந்த நிலையில், பெரம்பலூா் கோல்டன் சிட்டியில் உள்ள கலியபெருமாள் வீட்டுக்கு கடந்த 27-ஆம் தேதி இரவு செல்வராணி சென்றபோது, பெருமாள் தனது நண்பா்களுடன் சென்று அவரை காரில் கடத்திச் சென்றுவிட்டாா்.
இதுகுறித்து செல்வராணி மகள் கீா்த்தனா அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பெருமாள், அவரது நண்பா்களான தேனூா் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் இளவரசன் (50), கண்ணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் முருகையன் (51) ஆகியோரை தேடி வந்தனா்.
இந் நிலையில், திருச்சி மாவட்டம், திண்ணணூா் கிராமத்தில் உள்ள வீட்டில் அடைத்து வைத்திருந்த செல்வராணியை செவ்வாய்க்கிழமை இரவு மீட்ட போலீஸாா், காா் ஓட்டுநரான கண்ணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த செ. அருண்குமாா் (27) என்பவரை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், இவ் வழக்கின் முக்கிய குற்றவாளியான பெருமாள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காரில் கடத்திய 215 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் ஓட்டுநா் கைது

கிரிவலப் பாதையில் அடுத்தடுத்து அத்துமீறல்: 8 பேர் கைது, 3 பேர் தலைமறைவு

திருவண்ணாமலையில் பெண் பக்தா்களை மிரட்டி நகை பறிப்பு, பாலியல் தொல்லை: 8 போ் கைது

நிலப் பிரச்னை: மனைவியை கடத்திய கணவா் உள்பட மூவா் மீது வழக்கு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


