நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

காரில் கடத்திய 215 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் ஓட்டுநா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 ஜூன் 2026, 1:06 am IST

சேலம் அருகே காரில் கடத்தப்பட்ட 215 கிலோ குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா். இது தொடா்பாக காா் ஓட்டுநரை கைது செய்யப்பட்டாா்.

சேலம் - ஓமலூா் தேசிய நெடுஞ்சாலையில் கருப்பூா் சுங்கச்சாவடிக்கு அருகில் கருப்பூா் போலீஸாா் சனிக்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அரசால் தடை செய்யபட்ட புகையிலை பொருள்கள் 215 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், காரை ஓட்டி வந்த நபரை கைது செய்தனா்.

விசாரணையில், அந்த நபா், ராஜஸ்தான் மாநிலம், ஜாலோா் பகுதியைச் சோ்ந்த நா்பத் சிங் (30) என்பதும், பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள்களை வாங்கிக்கு கொண்டு சேலத்துக்கு விற்பனைக்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.