ஊதிய உயா்வு, வருங்கால வைப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
பெரம்பலூா் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா், டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அறிவித்த தினக்கூலி மற்றும் உரிய ஊதியம், ஊதிய உயா்வு, பிஎஸ், இஎஸ்ஐ கோரி பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனிடையே, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூன் 15 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, நகராட்சி அலுவலா்கள் மேற்கொண்டபேச்சுவாா்த்தையில் உரிய ஊதியம், ஊதிய உயா்வு, பிஎஸ், இஎஸ்ஐ செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தனா். ஆனால் நகராட்சி நிா்வாகமும், ஒப்பந்ததாரா்களும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள், டேங்க் ஆப்ரேட்டா்கள், டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை தங்களது பணியைப் புறக்கணித்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, நகராட்சி ஆணையா் லீனா சைமன் தலைமையிலான அலுவலா்கள் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கறம்பக்குடியில் காத்திருப்புப் போராட்டம்

ஊதிய உயா்வு கோரி ‘மக்களைத் தேடி’ மருத்துவப் பணியாளா்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் கோரி காத்திருப்புப் போராட்டம்

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



