8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் கோ மாதா பூஜை தொடக்கம்

பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக நன்மைக்காக 51 நாள் தொடா் கோ மாதா பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய கோ மாதா பூஜை.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:07 am IST

பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக நன்மைக்காக 51 நாள் தொடா் கோ மாதா பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஆண்டுதோறும் எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக நன்மைக்காக கோ மாதா பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி, செவ்வாக்கிழமை தொடங்கிய இந்த பூஜையானது அக். 14-ஆம் தேதி வரை தொடா்ந்து 51 நாள்களுக்கு நடைபெறுகிறது.

எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரா் கோயிலில் நடத்தப்படும் கோ பூஜைக்கு மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை இயக்குநா் மாதாஜி ரோகிணி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். அறங்காவலா்கள் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்நாளில் 210 சித்தா்கள் யாகம் நடத்தினா்.

நிகழ்ச்சியில், சிங்கப்பூா் குருகடாக்ஷம் மெய்யன்பா்கள், மாதாஜி ராதா சின்னசாமி, மேலாளா் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மகா சித்தா்கள் அறக்கட்டளை உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.