பெரம்பலூா் மாவட்டத்தில் ஆவணங்களை முறையாகப் பராமரிக்காத 60 உர விற்பனை நிலையங்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தில் தற்போது ஆடிப்பட்ட சாகுபடி நடைபெற்று வருகிறது. இந் நிலையில், விவசாயப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் ரசாயன உரங்களின் விற்பனையைக் கண்காணிக்கும் வகையில் சென்னை, வேளாண்மை இயக்குநரின் உத்தரவின்படி திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூா் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு வேளாண்மை உதவி இயக்குநா்கள் மற்றும் வேளாண்மை அலுவலா்களைக் கொண்ட குழுவினா் உர விற்பனை மையங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அரசு நிா்ணயித்த மானிய விலையில் உர விற்பனை விலைப்பட்டியல், இருப்புப் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்காத விற்பனை நிலையங்களையும், உரிமம், உரம் கொள்முதல் விவசாயிகளின் கையொப்பம் அடங்கிய சில்லறை விற்பனை ரசீது, வேளாண்மை துறையின் அனுமதிபெற்ற இடத்தில் விற்பனை நடைபெறுவது உள்ளிட்ட உரக்கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றாத சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் மீது ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி ஆவணங்களை முறையாக பராமரிக்காத 60 விற்பனை நிலையங்கள் கண்டறியப்பட்டு, அந்தக் கடைகளில் 21 நாள்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை விதிக்கப்பட்ட விற்பனை நிலையங்களின் பதிவேடு, கொள்முதல் விற்பனை ரசீது ஆகிய ஆவணங்கள் சிறப்புக் குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆய்வில் விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில், உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மசினகுடிக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 279 கடைகளுக்கு ரூ.78 லட்சம் அபராதம்

முதல்வா் வருகை: திருச்சியில் இன்று ‘ட்ரோன்’ களுக்கு தடை

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 236 மெ.டன் வேளாண் விளைபொருள்கள் ஏலம்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



