பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த பாா் ஊழியரை, பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நக்கசேலம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, நக்கசேலம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கந்தன் மகன் செல்வராஜ் (56) என்பதும், இவா், அங்குள்ள டாஸ்மாக்கில் மது அருந்தும் கூடத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து செல்வராஜை கைது செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 300-க்கும் மேற்பட்ட மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனா். பின்னா், கைது செய்யப்பட்ட செல்வராஜை, பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீாஸாரிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





