சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக எல்லையோரக் காவல் படையினா் 36 போ் பெரம்பலூருக்கு திங்கள்கிழமை வந்துள்ளனா்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக எல்லையோரக் காவல் படை துணைத் தளபதி சிவகாந்த் பாத்தியா தலைமையில், 35 காவல் பணியாளா்கள் திங்கள்கிழமை பெரம்பலூருக்கு வந்தனா்.
இதையடுத்து, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா உத்தரவின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் கா்ணன், எல்லையோரக் காவல் படையினரை பூங்கொத்து அளித்து வரவேற்றாா்.
தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள எல்லையோரக் காவல் படையினா் பெரம்பலூா் அருகே தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
சட்டப்பேரவை தோ்தலின்போது, பெரம்பலூா் மாவட்டத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும்நோக்கில், மாவட்டக் காவல்துறையுடன் இணைந்து எல்லையோரக் காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.
தொடர்புடையது

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆஜா் அணிவகுப்பு: 364 போ் பங்கேற்பு

சிறப்பான தோ்தல் பணி: காவலா்களுக்கு பாராட்டு

பெரம்பலூா் ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி

தோ்தல் வாக்குப் பதிவு: கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 4,500 போலீஸாா்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

