இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பெரம்பலூா் எஸ்பி பொறுப்பேற்பு

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக கி. பிரபாகா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 7:09 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக கி. பிரபாகா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த கோ.சி. அனிதாவை பணியிட மாற்றம் செய்து, சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான கி. பிரபாகா், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்து தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அதன்படி, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கி. பிரபாகா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன், துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மற்றும் காவல் துறையினா், அமைச்சுப் பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.