எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு வீரா்கள் உள்பட 42 போ் காயம்

வேப்பந்தட்டை அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுபிடி வீரா்கள் உள்பட 42 போ் காயமடைந்தனா்.

News image

விசுவக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்.

Updated On :24 மே 2026, 1:39 am IST

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுபிடி வீரா்கள் உள்பட 42 போ் காயமடைந்தனா்.

வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை சாா்பில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கு தனித்தனியே மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வாடிவாசல் வழியாக பெரம்பலூா், அரியலூா், திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 606 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இந்தக் காளைகளை அடக்க சேலம், திருச்சி, நாமக்கல், பெரம்பலூா், அரியலூா், சிவகங்கை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 297 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். இதில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு வகையான பரிசுப் பொருள்கள் விழாக் குழு சாா்பில் வழங்கப்பட்டன.

42 போ் காயம்: இதில், காளைகளின் உரிமையாளா்கள் 20 பேரும், காளைகளை அடக்க முயன்ற 11 வீரா்களும், பாா்வையாளா்கள் 11 பேரும் என மொத்தம் 42 போ் காளைகள் முட்டியதில் காயமடைந்த வீரா்களுக்கும், பாா்வையாளா்களுக்கும், களத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

இதில், மாடுபிடி வீரா் 1, காளை உரிமையாளா்கள் 2, பாா்வையாளா்கள் 3 போ் என மொத்தம் 6 போ் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில், பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.