விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 33 போ் காயமடைந்தனா்.
விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரைத் திருவிழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
விராலிமலை -இனாம் குளத்தூா் சாலையில் உள்ள வெளியம்பூா் குளக்கரை திடலில் நடைபெற்ற போட்டியை கோட்டாட்சியா் கோகுல் சிங் தொடங்கி வைத்தாா். இதில், அனுமதிக்கப்பட்ட 587 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. இதனை பிடிப்பதற்காக 200 மாடுபிடி வீரா்கள் நான்கு பிரிவுகளாக களத்தில் இறக்கப்பட்டனா். காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
இதில், மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள் என மொத்தம் 33 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு திடலில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசாக வேஷ்டி மட்டும் வழங்கப்பட்டது. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை பாா்வையிட்டனா்.
தொடர்புடையது
ரயில் அடிபட்டு காதுகேளாத மூதாட்டி பலி!

வந்தவாசியில் தீயணைப்பு வீரா்கள் தினம்

காளையாா்கோவிலில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரியில் இளவட்ட மஞ்சுவிரட்டு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

