மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ. 32.11 கோடி மதிப்பில் கடனுதவி
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடனுதவி பெறுவதற்கான காசோலை அளித்த மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக், சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் முன்னிலையில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி பெறுவதற்கான காசோலைகள் அளித்து மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் பேசியது:
பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 6,900 மகளிா் சுய உதவிக்குழுவில், 58 ஆயிரம் போ் உறுப்பினா்களாக உள்ளனா். இதில், 235 குழுக்களைச் சோ்ந்த 2,937 உறுப்பினா்கள் பயனடையும் வகையில் ரூ. 32.11 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மகளிா் சுய உதவிக்குழுக்கள் தங்களுக்குத் தெரிந்த தொழில்களை அல்லது பயிற்சி பெற்ற தொழில்களை தோ்ந்தெடுத்து அதில் ஈடுபட வேண்டும். ஏனெனில், மாவட்டத்தில் பல்வேறு மசாலா பொருள்கள் மற்றும் சத்துமாவு தயாரிக்கும் குழுவினுடைய பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடந்த வாரம் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
என்றாா் அவா்.
இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் கோபாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் விக்னேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

