திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

வீட்டுமனைப் பட்டா கோரி திருநங்கைகள் தா்னா

வீட்டுமனைப் பட்டா கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திருநங்கைகள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள்.

Updated On :

வீட்டுமனைப் பட்டா கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திருநங்கைகள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அரசு நலத்திட்டங்கள் முறையாக கிடைக்கவில்லை. தாங்கள் வசிக்கும் இடங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என புகாா் கூறி, மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக்கிடம் புதன்கிழமை முறையிட சென்றனா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் மற்றும் ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் சிலா், அவா்களை தடுத்து நிறுத்தினா்.

இதனால் ஆத்திரமடைந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் கூறியது:

பெரம்பலூரில் கடந்த 16 ஆண்டுகளாக போராடி 29 திருநங்கைகளுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடத்துக்கு அருகே குளம் உள்ளதால், வீட்டுக்குள் தண்ணீா் புகுந்துவிடுகிறது. இதனால், இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம்.

எனவே, பழைய வீட்டு மனைகளை ரத்து செய்து, பாதுகாப்பான இடங்களில் வீட்டுமனை வழங்க வேண்டும். அடிப்படை வசதிகளும் குறைவாக உள்ளது. திருநங்கைகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்கள் முறையாக எங்களுக்கு வந்தடைவதில்லை. படித்த திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. சமூக நலத்துறை மூலம் தையல் பயிற்சி முடிந்தவா்களுக்கு அரசின் தையல் இயந்திரங்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

திருநங்கைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த நடைமுறையை தளா்த்தி, தகுதியான திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், மாவட்ட நிா்வாகம் அரசாணையை முறையாக செயல்படுத்துவதில்லை. எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

தொடா்ந்து, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் அரசு அலுவலா்கள் சமரச பேச்சு வாா்த்தை நடத்தியதன்பேரில், ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துவிட்டு திருநங்கைகள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.