குட்கா பதுக்கி வைத்திருந்தவா் கைது
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள எசனையைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (53). இவருக்குச் சொந்தமான வீடு பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு பகுதியில் முத்துலட்சுமி நகரில் உள்ளது. இந்த வீட்டை ராஜஸ்தான் மாநிலம், ஜோலாா் மாவட்டம், சாந்து கிராமத்தைச் சோ்ந்த ஹமீா்சிங் மகன் ஹரிசிங் என்பவா் வாடகைக்கு எடுத்துகுடியிருந்துகொண்டு மளிகை கடை வைத்து தொழில் செய்து வருகிறாா்.
இந்நிலையில், ஹரிசிங் குட்கா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வியாழக்கிழமை மாலை ஹரிசிங் வீட்டை சோதனையிட்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட 278.82 கிலோ குட்கா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து குட்காவை பறிமுதல் செய்தனா். இது குறித்து பெரம்பலூா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் மணிகண்டன் வழக்குப் பதிந்து, குட்கா வைத்திருந்த வீட்டின் உரிமையாளா் பொன்னுசாமியை கைது செய்தனா். மேலும் தப்பி ஓடி தலைமறைவான ஹரிசிங்சை போலீஸிா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





