/

"பல்வேறு மாநிலங்களுக்கு தமிழகம்தான் முன்மாதிரி'

தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக உருவாக்கியவர் முதல்வர் ஜெயலலிதா என்றார் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ப. குமார்.

Updated On :12 மே 2013, 6:25 am IST

தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக உருவாக்கியவர் முதல்வர் ஜெயலலிதா என்றார் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ப. குமார்.

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியம், அண்டக்குளம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தலைமையில் சனிக்கிழமை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 9 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழல்குடை திறப்பு விழாவுக்கு முன்னிலை வகித்து அவர் மேலும் பேசியது:

தமிழக முதல்வர் செயல்படுத்திவரும் சிறப்புத் திட்டங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கின்றன. தமிழகத்தில் 3-வது முறையாக ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்றபோது மின் உற்பத்தி 7,500 மெகாவாட்டாகவும், மின்வாரியத்துக்கு ரூ. 45 ஆயிரம் கோடி கடனும் கடந்த திமுக ஆட்சியால் ஏற்பட்டிருந்தது. ஆனால், தற்போது மின் உற்பத்தி 11,400 மெகாவாட்டாகி, மின்வாரியத்துக்கு சுமார் 31 ஆயிரம் கோடிக்கு கடனும் அடைக்கப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, பயணிகள் நிழல்குடை மற்றும் ரூ. 8.15 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சிக் கட்டடத்தை அமைச்சர் திறந்துவைத்தார்.

இதில் புதுக்கோட்டை எம்எல்ஏ கார்த்திக்தொண்டைமான், விராலிமலை எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர்,   வருவாய் அலுவலர் க. நாகராஜன், வருவாய்க் கோட்டாட்சியர் சி. முத்துமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் ஓ. தனம்ஒய்யப்பன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் அமுதாபாலு, கே.வி. துரைராஜ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.