அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், பான் மசாலாகளை விற்பனை செய்ததாக 2 கடைக்காரர்கள் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
அன்னவாசல், இலுப்பூர் பேருராட்சிப் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீஸார் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் பெட்டிக்கடை வைத்திருக்கும் விஜயன்(66), இலுப்பூர் சௌராஷ்டிரா தெருவில் பெட்டிக்கடை வைத்திருக்கும் கதிர்வேல்(57) ஆகியோர் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவர்களிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.