ஆலங்குடி அருகே குடிசை வீடு தீக்கிரை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் வியாழக்கிழமை குடிசை வீடு தீக்கிரையானது.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் வியாழக்கிழமை குடிசை வீடு தீக்கிரையானது.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி தோழன்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி மீனா(57).கூலி வேலை பார்த்துவரும் மீனா, கணவரை இழந்தநிலையில், குடிசை வீட்டில் தனியே வசித்துவந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டைபூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
குடிசையில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினர் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீக்கிரையானது. இதுகுறித்து வடகாடு போலீஸார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...