விராலிமலை அருகே குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விராலிமலை-மணப்பாறை சாலையில் ராஜாளிப்பட்டி கிராமத்தில் 250க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் அன்றாட குடிநீர் தேவைக்கு ஆழ்துழாய் கிணறு அமைத்து இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதுதவிர, 2 குடிநீர் அடிபம்புகள் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகிக்கப்படாததால் அடி பம்புகளை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது கோடைகாலம் என்பதால் அடிபம்பிலும் தண்ணீர் கிடைக்காதது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விராலிமலை-மணப்பாறை சாலையில் காலிக் குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய விராலிமலை போலீஸார், குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியைக் கண்டித்து யோகி ஆதித்யநாத் பேரணி!
மணிப்பூரில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு எதிரான பேரணியில் மோதல்!

வாக்களிக்கச் செல்வோரிடம்... ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
இனி நேர்காணல்கள் கிடையாது! முடிவு எடுத்த லோகேஷ் கனகராஜ்?
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

