புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதிகளுக்கு தினமும் முறைவைக்காமல் 300 கனஅடி நீர் திறக்க தமிழக முதல்வர் மூலம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
அறந்தாங்கி பகுதிகளில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்தார். நாகுடி பயணிகள் மாளிகையில் அறந்தாங்கி ஒன்றிய அதிமுக செயாளர் பி.எம். பெரியசாமி தலைமையில் தினையாகுடி கூட்டுறவு வங்கி தலைவர் மார்க்கண்டேயன், மணமேல்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் நிலையூர் சரவணன் மற்றும் கல்லணைக் கால்வாய் பாசனதாரர்கள் சங்கத்தினர் சந்தித்து மனு அளித்தனர்.
இதில், கடந்த 4 ஆண்டுகளாக கல்லணைக் கால்வாய் நீர் இப்பகுதிக்கு வரவில்லை. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் 120 அடிக்கு நீர் இருந்தும் 1 நாள் மட்டுமே காவிரிநீர் வந்தது. ஆகவே புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதிக்கு முறைவைக்காமல் தினமும் 300 கன அடிநீர்
தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் தமிழக முதல்வருடன் பேசி இப் பகுதி விவசாயிகளுக்கு முறைவைக்காமல் தினமும் 300 கனஅடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









