சொத்துத் தகராறில் புதுக்கோட்டை அருகே தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் குடும்பத்தினரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ராக்கத்தம்பட்டி அருகே கலைக்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன்கள் போஸ் (50), ரவி(45).
இவர்களுக்கு இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. இதுதொடர்பாக திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில் போஸ் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும், காயம் அடைந்த ரவியின் மனைவி மகேஸ்வரி(38), மகன் அஜீத்(18) ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போஸ் மற்றும் அவரது உறவினர்கள் 7 பேர் மீது உடையாளிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






