டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மது தகராறில் நண்பனைக் கொலை : செய்த இளைஞர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பனைக் கொலை செய்த இளைஞரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:55 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பனைக் கொலை செய்த இளைஞரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சிவசுப்பிரமணியன்(25). டிப்ளமோ பட்டதாரி. ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த நிலையில் சனிக்கிழமை சிவசுப்பிரமணியன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரது நண்பரான ஆலங்குடி என்ஏஎம் தெருவைச் சேர்ந்த அப்துல்கலாம் மகன் அப்துல் ரஹ்மான்(23) என்பவரோடு ஆலங்குடி பள்ளிவாசல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் சமுதாயக் கூடத்தின் மேல்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ரஹ்மான், அங்கிருந்த கம்பியால் சிவசுப்பிரமணியனைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
ரஹ்மான் அதிர்ச்சியில் அங்கேயே அமர்ந்து இருந்தாராம்.  சப்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு வந்த அக்கம்பக்கத்தினர் ஆலங்குடி போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சிவசுப்பிரமணியனின் உடலை மீட்டு புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ரஹ்மானை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.