ரூ. 6 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: இருவர் கைது
புதுக்கோட்டை மாவட்டக் கடலோரப் பகுதிகளில் கடத்தல் நடைபெறுவதாக மத்திய உளவு பிரிவினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில்


புதுக்கோட்டை மாவட்டக் கடலோரப் பகுதிகளில் கடத்தல் நடைபெறுவதாக மத்திய உளவு பிரிவினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் இருவர் சென்ற மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்து ஆய்வு செய்தபோது அதில் 19.5 கிலோ தங்கத்தை இருவர் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு 6 கோடியாம். விசாரணையில் அவர்கள் பொன்பேத்தியைச் சேர்ந்த பி. மருதுபாண்டி(45) மீமிசலைச் சேர்ந்த பெரியமருது மகன் செல்வக்குமார் (36) எனத் தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், அப்பகுதி போலீஸார் உதவியுடன் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...