ஆலங்குடி அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்திய இளைஞர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். தலைமறைவான 4 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாதன்(56), தற்போது பேராவூரணியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் பேராவூரணிக்கு திரும்பினார். திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி வேகத்தடை அருகே மதுபோதையில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் காரை வழிமறித்து தகராறு செய்தனர்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் இருந்தவர்களை, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கற்களால் தாக்கியுள்ளனர்.
இதில் கோபிநாதன், அவரது மகன் சதீஷ்குமார்(24) ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் கோபிநாதன் புகார் அளித்தார். இதன்பேரில் விசாரனை நடத்திய போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட திருவரங்குளத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் மணிகண்டனைக்(24) கைது செய்தனர். தலைமறைவான பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கவனம் ஈர்க்கும் பூ பாடல்!

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!

பாட்ஷா பட இயக்குநரின் சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன்!

விஜய் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறாா்: திருமாவளவன் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

