/

ஆவுடையார்கோவிலில் திமுக சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம்

ஆவுடையார்கோவிலில்  ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜூலை 2018, 3:18 am

ஆவுடையார்கோவிலில்  ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு மீமிசல் முக்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஸ்குமார் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய துணை அமைப்பாளர்கள் ரா.பாரதிராஜா, உதயம் சரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்டச் செயலாளரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ரகுபதி, மாநில மகளிரணி துணைச் செயலாளரும், தலைமை கழக பேச்சாளருமான நூர்ஜகான் பேகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் பொன்.துரை, முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் ரா.துரைமாணிக்கம், சட்டத் திருத்தக் குழு உறுப்பினர் சி.ராமநாதன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எஸ்.சுந்தரபாண்டியன், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் கே.கே.சி.ராமநாதன், மாவட்ட இளைஞர் அணி, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஒன்றிய அவைத் தலைவர் க.கேசவன் வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.