அறந்தாங்கி அருகே புதன்கிழமை டிரெய்லர் லாரியுடன் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அறந்தாங்கி அருகே குரும்பூர் ஊராட்சி பட்டரைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சோலையன் மகன் காமாட்சி (40). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.
விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அவர், தனது இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் குரும்பூர் மேடு அருகே வந்தபோது, எதிரே வந்த டிரெய்லர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








