எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!யார் இந்த சோனம் வாங்சுக்? நண்பன் படத்தின் விஜய் கேரக்டர் கொசக்சி பசப்புகழ் இவரா?தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறிஇளம்பெண் தற்கொலை மிரட்டல்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி திங்கள்கிழமை தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

Updated On :26 ஜூன் 2018, 8:51 am IST

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி திங்கள்கிழமை தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பாசிப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(28). பொறியாளர். குளத்தூரைச் சேர்ந்த லட்சுமணன் மகள் வினோதினி(21). செவிலியர். இவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணத்துக்கு மணிகண்டன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, அவரை பெற்றோர் அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தனது பெற்றோர் வீட்டில் வினோதினி இருந்துள்ளார். இந்நிலையில்,  தன்னை  கணவரோடு சேர்த்து வைக்குமாறு கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் மனு அளித்துள்ளார். 
இதுதொடர்பாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லையாம். 
இதனால் விரக்தி அடைந்த வினோதினி, கீரனூர் பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தன்னை மணிகண்டனோடு சேர்த்து வைக்க வேண்டும், இல்லையெனில் குதித்து தற்கொலை செய்யப்போவதாக  மிரட்டல் விடுத்தார். 
இதையடுத்து அங்கு சென்ற கீரனூர் போலீஸார், தீயணைப்பு நிலையத்தினர் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி  2 மணி நேரத்துக்குப் பிறகு வினோதினியை மீட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.