புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வை 21,438 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
புதுக்கோட்டையில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 89 அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளிகள், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 78 அரசு,தனியார் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 167 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. புதுகை கல்வி மாவட்டத்தில், 42 தேர்வு மையங்களும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 5,439 மாணவர்கள், 6,418 மாணவிகள் என மொத்தம் 11,857 மாணவ, மாணவிகளும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 4,390 மாணவர்கள், 5,191 மாணவிகள் என மொத்தம் 9,581 மாணவ, மாணவிகள் எனமொத்தம் 21,438 பேர் தேர்வெழுத உள்ளனர்.இதில், தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் மௌண்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் லாரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.