புதுக்கோட்டையில் நடைபெற்றுவரும் புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ஆட்சியர் சு. கணேஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
புதுகை மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ஆட்சியர் சு.கணேஷ் ஆய்வு செய்து கூறியது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி 2019-ஆம் ஆண்டிற்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி 01.09.2018 முதல் நடைபெற்று வருகிறது. வாக்குசாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில், புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி, டி.இ.எல்.சி மேல்நிலைப்பள்ளி, விராலிமலை தொகுதிக்குட்பட்ட குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளி, புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அன்னவாசல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையங்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது சிறப்பு முகாம்களில் வாக்காளர்களிடமிருந்து வரப்பெற்றுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன், மேலும் வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6 -ல் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, வயது, இருப்பிடம் தொடர்பான ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-லிலும், ஒரே வாக்குசாவடியில் பெயர், விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-லிலும், ஒரே தொகுதியில் இடம் மாறியுள்ள வாக்காளர்கள் படிவம் 8ஏ-விலும் உரிய ஆவணத்துடன் விண்ணப்பம் செய்யலாம். எனவே வாக்காளர்கள் இந்த சிறப்பு முகாமை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
ஆய்வின்போது, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், வட்டாட்சியர்கள் பரணி (புதுக்கோட்டை), சேனை கருப்பையா (இலுப்பூர்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






