ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

கோமாபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்

கந்தர்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான

Published On :

கந்தர்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கோமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்டக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து தொடக்கி வைத்தார். முன்னாள் எம்எல்ஏ பே. மாரியய்யா ஒலிம்பிக் கொடியை ஏற்றிவைத்தார். 
முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் பு.பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். அண்ணாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விளையாட்டு போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.  முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் வீ. முத்துச்சாமி வரவேற்றார்.  நிகழ்ச்சியில், மாவட்ட உடற்கல்வி அலுவலர் ஆர். தங்கராஜ் , எஸ். ராமச்சந்திரன், சி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.