பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் ஆடிவெள்ளியையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்எம். ராஜா தலைமையில் நடைபெற்ற பூஜையின் தொடக்கமாக உடையபிராட்டி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை, மாலைகளில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 801 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றினர்.
ஏற்பாடுகளை திருவிளக்கு பூஜை குழுவினர் செய்தனர். அதுபோல பரியாமருதுபட்டி பரியாமருந்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை பகுதி கோயில்களில் ஆடிமாத சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கந்தர்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில், ஸ்ரீவெள்ளமுனியன் கோயில், ஸ்ரீஅங்காளம்மன் கோயில் மற்றும் ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன், பெரம்பூர் வீரமாகாளியம்மன் ஆகிய கோயில்களில் ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு காலை முதல் அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் மோதல் எதிரொலி: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 59 காசுகள் சரிந்து ரூ. 95.55ஆக நிறைவு!

ஜன நாயகன் வெளியீட்டு பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்?

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,600 குறைவு!

பிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சமா? அருண் ராஜ் எச்சரிக்கை!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK


