பிளாஸ்டிக் மறுசுழற்சியில் மிளிரும் மகளிர் குழுக்கள்!

புதுக்கோட் டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கழிவுகளை
பிளாஸ்டிக் மறுசுழற்சியில் மிளிரும் மகளிர் குழுக்கள்!
Updated on
2 min read

புதுக்கோட் டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதிலும், பிளாஸ்டிக் பை பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் துணிப் பை தயாரிப்பிலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. 
பொதுவாகவே மக்காத குப்பைக் கழிவுகளை மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதும் (தங்ஸ்ரீஹ்ஸ்ரீப்ங்), மக்காதவைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துவதும் (தங்க்ன்ஸ்ரீங் அய்க் தங்ன்ள்ங்) குப்பைகள் சேருவதைத் தடுக்கும் முறைகளாகும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 14 வகையான எளிதில் மக்காத- ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 
ஏற்கெனவே பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளும், மாற்றுப் பொருள் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் பரவலாக செய்யப்பட்டும் வருகின்றன.
பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாடு: புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்பு சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, துகளாக்கும் இயந்திரத்தில் துகள்களாக்கி, கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 3.43 லட்சம் மதிப்பில் விற்பனையும் செய்யப்பட்டிருக்கிறது. 
இதுகுறித்து கூட்டமைப்பின் செயலர் பி. கலைவாணிகூறுகையில், எங்கள் கூட்டமைப்பில் 18 குழுக்கள் உள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி மையம் அமைக்க ரூ. 3.75 லட்சம் அரசிடமிருந்து நிதியுதவி பெறப்பட்டு, 2016இல் இயந்திரங்கள் வாங்கி பணிகளைத் தொடங்கி ட்டோம். 
ஏறத்தாழ 100 பேர் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகிறோம்.  சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தப்படுத்தி துகளாக்குகிறோம். ஊரக வளர்ச்சி முகமையில் இருந்து சாலை போடும் பணிக்காக இந்தத் துகள்களை கிலோ ரூ. 30 என்ற விலையில் வாங்கிக் கொள்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் எங்கள் மையத்தில் 11,444  கிலோ பிளாஸ்டிக் துகளாக்கப்பட்டு,  ரூ.3,43,320-க்கு விற்பனை செய்திருக்கிறோம்.
இடையே கரூர் மாவட்டத்திலிருந்து வந்து 2500 கிலோ பிளாஸ்டிக் துகள்களை வாங்கிச் சென்றனர் என்கிறார் கலைவாணி.
துணிப்பை தயாரிப்பு: பிளாஸ்டிக் தடைக்குப் பிறகு மாற்றுப் பொருள் தேவையை ஈடுசெய்யும் வகையில், துணிப் பைகள் தயாரிப்புக்கென பல குழுக்களுக்கு அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. 
குறிப்பாக, புதுக்கோட்டை நகரப் பகுதியைச் சேர்ந்த "அச்சுடம் அன்னையர் குழு' என்ற பெயரில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ. 75 ஆயிரம் நிதி உதவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வீட்டிலுள்ள தையல் இயந்திரங்களை வைத்துக் கொண்டு, அரசு நிதியைக் கொண்டு கோவையிலிருந்து காடா துணி வாங்கி வந்து பைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து  அச்சுடம் அன்னையர் குழுவின் செயலர் ஆர். கண்ணகி கூறுகையில், எங்கள் குழுவைச் சேர்ந்த 11 உறுப்பினர்களைக் கொண்டு காடா துணிப் பை தைக்கும் பணி நடைபெற்று வருவதுடன், சுற்றுவட்டார சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் இருந்து அவர்களது வீடுகளிலேயே தைத்துப் பெற்றுக்கொள்கிறோம். 
ரூ.  7 முதல் 10 வரை ரகம் வாரியாக எங்களிடம் பைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஆயிரம் பைகள் வரை உற்பத்தியாகின்றன. தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வியாபார நிறுவனங்கள் மட்டுமே எங்கள் பைகளை வாங்கினர். 
இப்போது சேலத்துக்கும் எங்கள் பைகளை அனுப்பி வைக்கிறோம். சிறிய கட்டணத்துடன் அச்சிட்டும் தருகிறோம்.
ஒரு நாளில் தைக்கப்படும் பைகள் அன்றைக்கே விற்பனைக்குச் சென்றுவிடுகின்றன. தேவை அதிகமாக இருக்கிறது. மேலும் மகளிர் திட்டத்தில் நிதி பெற்று பெரிய அளவில் செய்யவும் தயாராக உள்ளோம் என்கிறார் கண்ணகி.


அரசு ஊக்குவிக்கத் தயார்
மக்காத குப்பைகளைத் தவிர்ப்பதும், மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதும் இன்றைய சூழலில் உலக அளவில் மிகவும் அவசியமான பணி. இப்போது புதுக்கோட்டையில் எளிய அளவில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மகளிர் திட்டம் மூலம் இப்பணிகளுக்கு கூடுதலாக ஊக்கம் கொடுத்து விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்கிறார் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com