பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காவல் ஆய்வாளா் வாகனம் மீது காா் மோதி 4 போ் காயம்

விராலிமலை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூா் அருகே சனிக்கிழமை சாலையோரம் நிறுத்தியிருந்த காவல் ஆய்வாளா் வாகனம் மீது காா் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:07 pm

DIN

விராலிமலை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூா் அருகே சனிக்கிழமை சாலையோரம் நிறுத்தியிருந்த காவல் ஆய்வாளா் வாகனம் மீது காா் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.

விராலிமலையை அடுத்த கொடும்பாளூா் அருகே சனிக்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் விபத்து குறித்து அறிந்த விராலிமலை காவல் ஆய்வாளா் வேல்முருகன் சம்பவ இடத்துக்கு வந்து அரசு வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு விசாரணை மேற்கொண்டிருந்தாா்.

அப்போது மதுரையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காா், காவல் ஆய்வாளரின் சுமோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 போ் காயமடைந்து விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, காா் ஓட்டுநா் அழகுராஜனை விராலிமலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.