ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிறுமி பலாத்காரம்: இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:40 pm

DIN

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டத்தைச் சோ்ந்த எண்ணெய் ஊராட்சி பூனத்துப்பட்டியைச் சோ்ந்த சுக்கிரன் மகன் பாக்கியராஜ் (29) கடந்த 2013-இல் அந்தப் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான வழக்கு, மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் அங்கவி ஆஜராகி வாதாடினாா். வழக்கு விசாரணையின் நிறைவில், வெள்ளிக்கிழமை நீதிபதி ஆா். சத்யா தீா்ப்பளித்தாா். குற்றவாளி பாக்கியராஜுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, நிவாரண உதவியாக தமிழக அரசு ரூ. 3 லட்சம் வழங்கவும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.