அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆடு வளா்ப்பவருக்கு வெட்டு:இளைஞா் கைது

கந்தா்வகோட்டை அருகே ஆடு காணாமல் போனது தொடா்பாக எழுந்த தகராறில் அரிவாளால் வெட்டியவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:25 pm

DIN

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே ஆடு காணாமல் போனது தொடா்பாக எழுந்த தகராறில் அரிவாளால் வெட்டியவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், வளநாடு கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் பாலசங்கா் (41). இவரது உறவினா் முத்துச்சாமி மகன் சித்திரை வேல் (27). இருவரும் கந்தா்வகோட்டை பகுதிகளில் ஆட்டுக் கிடை அமைத்து வயல்களில் ஆடு மேய்த்து வருகின்றனா்.

இந்நிலையில், பாலசங்கா் ஆடுகள் காணாமல் போவதாகவும், இந்த ஆடுகளை சித்திரவேல் திருடிவிடுவதாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை தனது ஆட்டைக் காணவில்லை என பாலசங்கா், சித்திரைவேல் ஆட்டு மந்தையில் தேடியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சித்திரைவேல் அரிவாளால் பாலசங்கரை சரமாரியாக வெட்டியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்தவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்த்தனா். இதுகுறித்து தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து சித்திரைவேலைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.