ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘களமாவூா் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்’

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகிலுள்ள களமாவூா் ரயில்வே மேம்பாலத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:32 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகிலுள்ள களமாவூா் ரயில்வே மேம்பாலத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் கோரிக்கைவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை- திருச்சி நெடுஞ்சாலையில் கீரனூா் அருகிலுள்ள களமாவூா் ரயில்வே மேம்பாலப் பணிகள் நீண்ட காலமாக தொய்வாகவே இருந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினேன்.

பாலப் பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். அதன்பிறகு பாலத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. தற்போது மேம்பாலப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன.

பாலப்பணிகளின்போது அருகே அமைக்கப்பட்ட மாற்றுச் சாலை தற்போது மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே, முடிவுற்ற மேம்பாலத்தை விரைவில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியரும், நெடுஞ்சாலைத் துறையினரும் அனுமதிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.