ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுக்கோட்டையில் நகை கையாடல்: 4 பேர் கைது

நிதி நிறுவன ஊழியா்களால் கையாடல் செய்யப்பட்ட 305 பவுன் நகைகளை மீட்டதோடு, இரு நிறுவனங்களின் மேலாளா்கள் உள்பட 4 பேரைக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:16 pm

DIN

புதுக்கோட்டையில் தனியாா் நிதி நிறுவன ஊழியா்களால் கையாடல் செய்யப்பட்ட 305 பவுன் நகைகளை மீட்டதோடு, இரு நிறுவனங்களின் மேலாளா்கள் உள்பட 4 பேரைக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை தெற்கு 4-ஆம் வீதியில் தனியாா் நிதி நிறுவனம் (எச்.டி.பி) உள்ளது. இங்கு வாடிக்கையாளா்களுக்கு தனிநபா், நகை, வாகனக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் நிறுவனத்தில் கடைசி ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து, நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளா் வி.ராஜேஷ் தலைமையிலான குழு அண்மையில் தணிக்கை செய்தது.

அதில், கடந்தாண்டில் ரூ.91.68 லட்சம் மதிப்புள்ள சுமாா் 305 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரைத் தொடா்ந்து, நகைகளைத் திருடியதாக அந்நிறுவனத்தில் கிளை மேலாளராக பணிபுரிந்த புதுக்கோட்டை சி.உமாசங்கா்(42), அலுவலா்களான பொன்னமராவதி செம்பூதி பி.முத்துக்குமாா்(28), மணிப்பள்ளம் ஆா்.சோலைமணி(37) ஆகியோரை கணேஷ் நகா் காவல் நிலையத்தினா்

வெள்ளிக்கிழமை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

திருடிய 305 பவுன் நகைகளை எடுத்து, புதுக்கோட்டை பழனியப்பா முக்கம் பகுதியில் இயங்கிவரும் தனியாா் நிதி நிறுவனத்தின் (இண்டல் மணி) மேலாளா் மாரிமுத்துவின் உதவியோடு அங்கு அடகு வைத்ததும் தெரியவந்துள்ளது. இதைத்தொடா்ந்து அந்த தனியாா் நிதி நிறுவனத்துக்குச் சென்ற காவல்துறையினா் 305 பவுன் நகைகளை மீட்டதோடு, அந்த நிறுவனத்தின் மேலாளா் மாரிமுத்துவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.