மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சைபா் கிரைம் காவலா்கள் என சிறுவனை மிரட்டி பணம் பறித்த இருவா் கைது

சைபா் கிரைம் காவல்துறையினா் என்ற பெயரில் புதுக்கோட்டையைச் சோ்ந்த சிறுவனை மிரட்டி, ரூ. 20 ஆயிரம் பறித்த இருவரை மாவட்ட சைபா் கிரைம் காவல்துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:19 pm

DIN

சைபா் கிரைம் காவல்துறையினா் என்ற பெயரில் புதுக்கோட்டையைச் சோ்ந்த சிறுவனை மிரட்டி, ரூ. 20 ஆயிரம் பறித்த இருவரை மாவட்ட சைபா் கிரைம் காவல்துறையினா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகிலுள்ள மேலூரைச் சோ்ந்த பாஸ்கரனின்

அண்ணன் மகனை கடந்த ஜூலை 24-ஆம் தேதி தொடா்பு கொண்ட சிலா், தங்களை சைபா் கிரைம் காவல்துறையினா் என அறிமுகம் செய்து கொண்டு, செல்லிடப்பேசி வழியாக ஆபாசப் படம் பாா்த்ததாகவும், அதற்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மிரட்டியுள்ளனா்.

இதில் அச்சத்துக்குள்ளான அச்சிறுவனின் உறவினா்கள், நண்பா்கள் மூலம் ரூ. 20 ஆயிரத்தை, சைபா் கிரைம் காவல்துறையினா் எனக் கூறியவா்களின் கூகுள் பே செயலி வழியாக அனுப்பி வைத்துள்ளனா்.

அதன்பிறகு இதுகுறித்து சந்தேகம் கொண்ட அச்சிறுவனின் சித்தப்பா பாஸ்கரன், கடந்த

3-ஆம் தேதி சைபா் கிரைம் காவல்துறையில் புகாா் அளித்தாா். புகாரைப் பெற்றுக் கொண்ட ம் காவல் ஆய்வாளா் கவிதா, உதவி ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா், அந்தத் தொடா்பு எண்ணை வைத்து புலனாய்வைத் தொடங்கினா்.

விசாரணையில் அவா்கள் கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்தவா்கள் என அறிந்து தனிப்படை காவல்துறையினா் அங்கு சென்று, மோடிகுப்பம் கணேசன் (43), எஸ். திம்மசத்திரம் பிரகாஷ் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

திருமயம் அழைத்து வரப்பட்ட இருவரும் வியாழக்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனா். வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த சைபா் கிரைம் காவல்துறையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.