மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாராட்டத்தக்க நிதிநிலை அறிக்கை: தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம்

தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பாராட்டும்படி உள்ளது என்று, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:44 pm

DIN

தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பாராட்டும்படி உள்ளது என்று, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடுமையான நிதி நெருக்கடியிலும், தோ்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்னும் உறுதிமொழி அளித்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.

தமிழ் வளா்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், அனைத்துத் துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டு இருப்பதும், ரூ. 10 லட்சம் பரிசுப் பணத்துடன் ஜூன் 3ஆம் தேதி செம்மொழி விருது வழங்கப்படுவதும்,தொல்லியல் துறைக்கு ரூ. 29 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதும், தமிழரின் தொன்மையை மெய்ப்பிக்கும் அகழ்வாய்வுப் பணிகளுக்கும், கீழடி கண்காட்சிக்கும் வழிவகை செய்யப்பட்டு இருப்பதும் வரவேற்புக்குரியதாகும்.

தமிழ்நாட்டுக்கென தனித்துவமான தனிக்கல்விக்கொள்கை உருவாக்கப்படும் எனும் அறிவிப்பும், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதும், நடுநிலைப் பள்ளிகளில் கணினி வகுப்பறைகள் அமைத்திட ரூ. 114. 18 கோடி நிதி ஒதுக்கி இருப்பதும், எட்டு வயது குழந்தைகளின் கல்வி அறிவினை உறுதிப்படுத்திடும் வகையில் எண்ணும்-எழுத்தும் இயக்கம் உருவாக்கி, ரூ. 88.70 கோடி நிதி ஒதுக்கி இருப்பதும், 413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 கையடக்க கணினிகள் வழங்கப்படுவதும் பெரும் வரவேற்புக்குரியதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.