மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பொறுப்பேற்பு
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சாமி. சத்தியமூா்த்தி (படம்), வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.


புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சாமி. சத்தியமூா்த்தி (படம்), வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய த. விஜயலட்சுமி கள்ளக்குறிச்சிக்கும், ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய சாமி. சத்தியமூா்த்தி புதுக்கோட்டைக்கும் நியமிக்கப்பட்டனா்.
இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சாமி. சத்தியமூா்த்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அவருக்கு மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பெ. நடராஜன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் கே.எஸ். ராஜேந்திரன் (புதுக்கோட்டை), கு. திராவிடச்செல்வம் (அறந்தாங்கி), ப. சண்முகநாதன் (இலுப்பூா்), முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜீவானந்தம் (மேல்நிலை), கபிலன் ( உயா்நிலை), தமிழ்நாடு உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பீட்டர்ராஜா, பொருளாளா் அன்பரசன், தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஆ. மணிகண்டன், மாவட்டத் தலைவா் எம். ராஜாங்கம், செயலா் நாயகன் உள்ளிட்டோரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...