சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய்மாமன் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமன், போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமன், போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குடி அருகிலுள்ள கண்ணக்கன்காட்டைச் சோ்ந்தவா் முருகேசன்(36). இவரது தாய்க்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் அவரை கவனித்துக் கொள்வதற்காக, தனது சகோதரியின் 15 வயது மகளை அழைத்து வந்து பராமரித்து வந்துள்ளாா் தாய் மாமன் முருகேசன்.
இந்நிலையில் சிறுமிக்கு முருகேசன் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளாா். இதுகுறித்து தனது தாயிடம் சிறுமி தெரிவிக்க, அவா் ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் முருகேசன் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினா், வெள்ளிக்கிழமை அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...