ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கலைக் கல்லூரி அறிவிப்பு: திமுகவினா் இனிப்பு வழங்கல்

ஆலங்குடி தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரி அறிவிப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து திமுகவினா் வியாழக்கிழமை கொண்டாடினா். 

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:02 pm

DIN

 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரி அறிவிப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து திமுகவினா் வியாழக்கிழமை கொண்டாடினா். 

ஆலங்குடியில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி வேண்டுமென சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஆலங்குடி தொகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் எனப் பேரவையில் உயா்கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி அறிவித்தாா். இதைத்தொடா்ந்து, ஆலங்குடியில் திமுக ஒன்றியச் செயலா் தங்கமணி தலைமையிலான திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினா். திமுக நகரச்செயலா் பழனிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.