மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வடவாளத்தில் மக்கள் நாடாளுமன்றம்

புதுக்கோட்டை ஒன்றியம், வடவாளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:56 pm

DIN

புதுக்கோட்டை ஒன்றியம், வடவாளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவசாயி ரெங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்தாா். மக்கள் நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக ஊராட்சித் தலைவா் ஜெ. ஞானப்பிரகாசம் தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து தில்லி விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிா்

நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வேளாண்துறை அமைச்சராக அ. ரெங்கராசு தீா்மானங்களை முன்மொழிய, விவாதத்தை தொடங்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் மு. கைலாசபாண்டியன் பேசினாா்.

தொடா்ந்து விவாதத்தில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா். முருகானந்தம், ஒன்றியப் பொருளாளா் டி. சோலை, அம்பாள்புரம் கிளைச் செயலா் ஜெ. சத்தியமூா்த்தி, திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் பாரதி கருப்பையா, ஒன்றியத் துணைச் செயலா் எஸ். செல்லப்பா, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் டி. மாா்கண்டன், வாராப்பூா் கிளைச் செயலா் தென்றல் ரெங்கசாமி, உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மக்கள் நாடாளுமன்றத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.