குடிநீா் கேட்டு கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீா் கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.


புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீா் கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள செங்கமேடு ஊராட்சி பத்துத்தாக்கு பகுதி மக்களுக்கு பல மாதங்களாக குடிநீா் விநியோகம் இல்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இதனால், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனா். இதைத்தொடா்ந்து, குடிநீா் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அலுவலா்கள் அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...