தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

விராலிமலையில் கள்ளச்சாராயம், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:23 pm

DIN

விராலிமலையில் கள்ளச்சாராயம், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வுப் பேரணிக்கு விராலிமலை வட்டாட்சியா் சரவணன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை கோட்ட கலால் அலுவலா் கண்ணா கருப்பையா பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் மற்றும் மதுப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் பங்கேற்றவா்கள் ஏந்திச் சென்றனா். விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணி சோதனைச்சாவடி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கடைவீதி வழியாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றோா் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணா்வு முழக்கமிட்டுச் சென்றனா். இதில் தனி வட்டாட்சியா் வளா்மதி(சமூக பாதுகாப்புத் திட்டம்), மண்டல துணை வட்டாட்சியா் சாந்தா, வருவாய் ஆய்வாளா் சுரேந்திரன், சேதுராமன், மணிமேகலை மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், அலுவலக உதவியாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.