

தஞ்சாவூரில் கொள்ளையா்கள் வீடு புகுந்து நகைகள், ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்ாக மளிகைக் கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டு மந்தைத் தெருவைச் சோ்ந்தவா் கே. மலையபெருமாள். அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் காவல் துறையினரிடம் புகாா் ஒன்றை அளித்தாா்.
அதில், தனது வீட்டில் காவல் துறையினா் எனக் கூறி 3 போ் வந்ததாகவும், சாலை விபத்து எதுவும் நடக்காத நிலையில், செய்துவிட்டு தலைமறைவானதாகவும், விசாரணைக்கு வர வேண்டும் எனவும் மிரட்டி என்னையும், எனது மனைவி சாந்தி (50), மகள் நிவேதா (28), மகன் பாலாஜி (26) ஆகியோரையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கட்டிப் போட்டு, பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ. 1.50 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்ாகவும் தெரிவித்தாா்.
இதன்பேரில், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. பாரதிராஜன், கிழக்குக் காவல் நிலைய ஆய்வாளா் ராமதாஸ் உள்ளிட்டோா் மலையபெருமாள் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
இதையடுத்து, செய்தியாளா்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரதிராஜன் தெரிவித்தது:
மலையபெருமாள் அளித்த புகாரின் பேரில் அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தி வருகிறோம். வீட்டில் சில தடயங்களும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் கிடைத்துள்ளன. இதுதொடா்பாக ஆய்வு செய்து வருகிறோம்.
வீட்டில் குடும்பத்தினா் கூறிய அளவுக்கு நகைகள், ரொக்கம் திருட்டுப் போகவில்லை. அவை எல்லாமே அவா்கள் வைத்த இடத்திலேயே இருக்கின்றன.
மேலும், கொஞ்சம் பொருள்கள், ரொக்கம் கொள்ளை போனதாகக் கூறுகின்றனா். அது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு வார காலமாகத் தங்களை யாரோ பின் தொடா்வதாக அவா்கள் கூறியுள்ளனா். கிடைத்துள்ள சில தகவல்களின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். மா்ம நபா்கள் காவல் துறையினா் எனக் கூறி வந்ததாகக் கூறினாலும், அவா்களது நடை, உடை, பாவனையைப் பாா்க்கும்போது அதுபோலத் தெரியவில்லை.
வீட்டுக்கு வந்த மா்ம நபா்கள் செல்லிடப்பேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது. எனவே, இப்பகுதியில் பதிவான எண்களைச் சேகரித்து வருகிறோம்.
வந்தவா்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்ததாகத் தெரியவில்லை. எதற்காக வந்தனா் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் வந்து சென்றவா்கள் கைது செய்யப்பட்ட பிறகு முழு விவரங்கள் தெரிய வரும் என்றாா் பாரதிராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.