மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:05 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

புதுக்கோட்டை, ஜூலை 30: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட பொற்பனைக்கோட்டையில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சாா்பிலான அகழாய்வுப் பணியை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, ஒன்றியக் குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, அகழாய்வு இயக்குநா் பேராசிரியா் இனியன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனா் ஆ. மணிகண்டன், வேப்பங்குடி ஊராட்சித் தலைவா் ராஜாங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

சங்ககாலக் கோட்டை இருந்த இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த இடத்தில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையினா் ஏற்கெனவே ஜிபிஆா் கருவி மூலம் அடையாளம் கண்டு கொடுத்த இடத்தில் அகழாய்வுப் பணி தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த அகழாய்வுப் பணிக்கு இந்தியத் தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு

திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடக்க நிதியாக ரூ. ஒரு லட்சம் நிதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.