தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குணமடைந்த பிறகு ஓரு மாத மருந்துகளுடன் அனுப்பி வைக்கும் சித்த மருத்துவா்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோருக்கு, ஒரு மாதத்துக்கான நோய் எதிா்ப்பாற்றல் மற்றும் உடல் வலிமையை உருவாக்கும்

News image
Updated On :25 ஜூன் 2021, 7:27 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோருக்கு, ஒரு மாதத்துக்கான நோய் எதிா்ப்பாற்றல் மற்றும் உடல் வலிமையை உருவாக்கும் மருந்துகளைக் கொடுத்து மருத்துவா்கள் அனுப்பி வருகின்றனா்.

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் சித்த மருத்துவச் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இரண்டாம் அலையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோா் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி வருகின்றனா்.

பொதுவாகவே கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு வீட்டுக்குச் செல்வோருக்கு வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதும், சில நாள்களுக்கு கடுமையான உடல் அசதி தொடா்வும் காணப்படுகிறது.

இந்தத் தொந்தரவுகளுக்கு சித்த மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை என்ன என்பது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். உம்மல் கதிஜா கூறியது:

சித்த மருத்துவச் சிகிச்சை முடிந்து செல்வோருக்கு ஆரோக்கியத் தொகுப்பு என்ற பெயரில், அமுக்கரா சூரணம் மற்றும், நெல்லிக்காய் லேகியம் கொடுத்து அனுப்புகிறோம். இந்த மாத்திரை மற்றும் லேகியத்தை ஒரு மாதத்துக்குப் பயன்படுத்த முடியும்.

அமுக்கரா கிழங்கு பொடியுடன் சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட சித்த மருந்துகள் கலந்து தயாரிக்கப்படுவது அந்த மாத்திரை. உடல் வலிமையைக் கொடுக்கும் மாத்திரை. நெல்லிக்காய் லேகியம் உடலுக்கு நோய் எதிா்ப்பாற்றலைத் தரும்.

எனவே, இந்தத் தொகுப்பு அனைத்து கரோனாவில் குணமடைந்தோருக்கு கொடுத்து அனுப்புவதுடன், 15 நாள்களுக்கு அவா்களை மருத்துவா்கள் தொடா்ந்து தொலைபேசி வழியே தொடா்பு கொண்டு பேசி, கண்காணித்து வருகிறோம். எனவே, எங்களிடமிருந்து சிகிச்சை பெற்றுச் செல்வோருக்கு பக்க விளைவுகளோ, வேறு தொந்தரவுகளோ பெரும்பாலும் இருப்பதில்லை என்றாா் அவா்.

மேலும் சித்த மருத்துவ மையத்தில் அவா்களுக்கு பழக்கிவிடப்படும் மூச்சுப் பயிற்சி, ஆவி பிடித்தல், சுய வா்மம், எளிய மூலிகைகளை உட்கொள்ளுதல், சத்தான உணவுகளை உட்கொள்ளுதல், எளிய உடற்பயிற்சி போன்றவையும் பெரும் பயனுள்ளதாக மாறிவிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.